அரசியல் விழிப்புணர்வு தேர்தல் சீர்திருத்தத்தின் தேவையை உணர்த்தி வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் மேற்கொள்ளும் கருப்பையா கரூர் மாவட்ட எல்லைக்கு வருகை தந்துள்ளார்.




மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த கருப்பையா வயது 53. இவர் அகில இந்திய காந்தி இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பான இவர் ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் தேசிய அளவில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரமாக சைக்கிள் உடன் கூடிய நடைபயணத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


முதல் முறையாக 1992ல், மதுரை முதல் சென்னை வரை, தேசிய கொடி ஏந்தி கொண்டு, சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். அதன் பின், கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை 118 நாட்களில் ஒரே சைக்கிளில் 6,000 கி.மீ., துாரம் பயணித்து சாதனை படைத்தார்.




இந்தியாவின் 75வது சுதந்திர தின  ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சிபோது திருச்சியில் இருந்து அவர்கள் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்கள். இந்த சைக்கிள் பயணத்தின் போது கருப்பையாவின் மனைவி சித்ரா வழியில் உயிர் இழந்தார். மனைவி உயிரிழப்புக்குப் பிறகும் தற்பொழுது வரை தொடர் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்.


தற்போது சைக்கிள் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகளை வைத்தும் தேசியக்கொடிகளை பறக்க விட்டும் ஒசூர் முதல் கோயம்புத்தூர்அதிலிருந்து உத்திரமேருர் வரை சைக்கிள் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், நேற்று இவர் திருப்பூர் வழியாக கரூர் மாவட்ட எல்லையான தென்னிலை பகுதிக்கு வந்திருந்தார்.


இதுகுறித்து கருப்பையா கூறுகையில், “இந்தியா 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று கடந்து விட்டது. ஆனால் ஜனநாயகத்தினுடைய மாண்புகளையும் அதனுடைய மதிப்புகளையும் மறந்து விட்டோம். எந்த ஒரு வேட்பாளர் நமது பகுதியில் தேர்தல்களில் கல்வி தகுதி, அனுபவம், அவருடைய சிந்தனை, சமூக சேவையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என நாம் முன் வர வேண்டும்.


எந்த ஒரு வேட்பாளரும் கொடுக்கக்கூடிய இலவச பொருள்களையும் அதற்கான தொகைகளையும் நம் வாங்க மறுக்க வேண்டும்.


இது மிகப்பெரிய ஜனநாயக நாடு சுதந்திரத்திற்காக பெருமகன்களுடைய நல்வாழ்த்துக்கள் உடன் நம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், பாரத தேசத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் ஏழை, எளிய மத்திய அரசாக உருவாக வேண்டும்.


ஜனநாயக மக்கள் அனைவரும் சுய உரிமையுடன் வாக்களிக்க வேண்டும் தேர்தல் சீர் திருத்தத்தையே புதிய தேர்தல் திருத்தமாக வடிவமைக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணியில் மூத்த தேர்தல் ஆணையர் சி. எஸ். ஸ்டேஷன் போல ஒரு தலை சிறந்த நிர்வாகி தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். தமிழகம் கர்நாடகா கடந்த ஈரோடு இடைத்தேர்தல் அனைத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம்  மேற்கொண்டேன்.


கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி ஓசூரில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் வந்தடைந்து தற்போது கரூர் மார்க்கமாக திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தர மேருரில் முடிவடைகிறது .




34 ஆண்டுகளாக தேச நலனுக்காக மிதிவண்டி பயணமாக ஒரு லட்சத்தி 3000 கிலோமீட்டர் பயணம் செய்து உள்ளேன். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வருவதற்கான மத்திய அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகிறேன்.


மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் திடீரென ஆயிரம் ரூபாய் மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த கஷ்டம் தீர்ந்து தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தியுள்ளது. இதனால் முன்னோக்கி சென்று கொண்டிருக்க கூடிய இந்த மக்களிடத்தில் இது போன்ற அவசர அவசரமான முடிவுகளை எடுப்பதின் காரணமாக மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தடை இத்துடன் நிற்க வேண்டும்” என கூறினார்.


பேட்டி-கருப்பையா அகில இந்திய காந்தி இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்.