தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமை கொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000
மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படவுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம் அந்தவகையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும். விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.tamilvalarchithurai.tn. gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் தேதி மேலும், விண்ணப்பங்களை 31.10.2025 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn. gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.