விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் ரகுராமன். கிராம நிர்வாக உதவியாளர். இவரது மனைவி ஸ்வஸ்திக். இவர்களது மகன் சபரிநாத்(வயது 9).  திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் ஸ்வஸ்திக், கணவரிடம் கோபித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.




 


கொரோனா காலத்துல பிறந்த குழந்தையை எப்படிங்க கொஞ்சுறது? ஜப்பான் மக்களின் அன்பு வழி..!


கடந்த சில நாட்களாக தாயை பார்க்க முடியாமல் சபரிநாத் தவித்துள்ளார். தனது தாயை பார்க்க அந்த சிறுவன் முடிவு செய்தார். ஆனால் பஸ்சில் தியாகதுருகத்திற்கு செல்ல அந்த சிறுவனிடம் பணம் இல்லை. எனவே பெற்றோர் வாங்கிக்கொடுத்த சிறிய சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து தியாகதுருகத்திற்கு செல்ல சபரிநாத் முடிவு செய்தார். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக தியாகதுருகத்திற்கு 103 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த தூரத்தை ஒரு பொருட்டாக கருதாமல் சிறுவன் சபரிநாத்,   மாலை 6 மணி அளவில் திண்டிவனத்தில் இருந்து சைக்கிளில் தியாகதுருகத்திற்கு புறப்பட்டார்.




 


கூட்டேரிப்பட்டு, செண்டூரை தாண்டி பாதிராப்புலியூரில் இரவு 7 மணி அளவில் சென்றபோது, ரோந்து வந்த மயிலம் காவல் ஆய்வாளர் கிருபா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சிறுவனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, தியாகதுருகத்தில் உள்ள தனது தாயை பார்க்க செல்வதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், திண்டிவனத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம்தான் வந்திருக்கிறாய். இன்னும் 88 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எப்படி செல்வாய் என்று கேட்டனர். அதற்கு சிறுவன் சபரிநாத், 1 மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் வந்து விட்டேன். இப்படியே வேகமாக சென்றால், விரைவில் தாயை பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.


 




 


ஆனால் அவனை சைக்கிளில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், நடந்த விவரத்தை கூறினர். பின்னர், அங்கு பதறியடித்துக்கொண்டு வந்த ரகுராமிடம் சபரிநாத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். இது குறித்து அவரிடம் கேட்கும் போது, சபரிநாத்தை இரண்டு மணி நேரமாகக் காணவில்லை என்று பல இடங்களில் தேடிவந்தேன். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது தான் எனக்கு சபரிநாத் இங்கு இருப்பதாக அழைப்புவந்தது என்றார்.


ஆடிப்பூர உற்சவத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் தெரியுமா?