அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட விழுப்புரம் தளவானூர் தடுப்பணையின் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர் என திரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி மதிப்பீட்டிலான தடுப்பப்ணை 2020 அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டது இந்த தடுப்பணை. மொத்தம் 3 ஷட்டர்களுடன் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார்.




இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கும் தண்ணீர் கடலுார் மாவட்டத்தில் என திரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம் என மொத்தம் 14 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணைதான் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.




கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு விவசாயிகள் அதிர்ந்து போயினர். அப்போது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது. தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும் என்றார். அப்போது திமுகவினர் தடுப்பணையை சீரமைப்பு செய்யக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வடதமிழகத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்தான் தாளவனூர் தடுப்பணையில் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.




இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வடதமிழகத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்தான் தாளவனூர் தடுப்பணையில் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே 2 முறை தளவானூர் தடுப்பணை மீண்டும் மீண்டும் உடைந்திருப்பதை எப்போது அதிகாரிகள் சரி செய்வார்கள் என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.


10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுவை ஆகிய பகுதிகளிலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் உடைப்பு ஏற்பட்ட தடுப்பணை பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.