விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் விமலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து பள்ளியின் தூய்மைப் பணிகளை, கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மைப் பணியாளர்கள், பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளவில்லை என்பதால் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளாக பரவிக்கிடந்தது.
Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
Ma Subramanian Speech: வீடு தேடி மருத்துவம் கியூபாவில் கூட கிடையாது.. அமைச்சர் மா.சு மாஸ் பேச்சு
இந்த சூழலில் இன்று காலை பள்ளிக்கு வருகை புரிந்த தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியர் செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பள்ளியை தூய்மை செய்யும்படி வலியுறுத்தினர். அதற்கு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளை வெளியில் கொட்டினால் தான், அகற்றுவோம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியை செல்வி பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.
Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport
விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம்.. சிலையை சீரமைத்த போலீசார்..
அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணிக்கு ஒரு நபரை நியமிக்க கூறியுள்ளனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம், தாங்கள் கூறும் நபர்களை தான் பணி நியமனம் செய்ய வேண்டும் எனக்கூறியதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தூய்மைப் பணியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க........
குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? ஜூன் 30-ஆம் தேதிக்குள் இதைச் செய்துவிடுங்கள்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்