ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு(Ration Card Aadhaar Linking Last Date) இந்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும்,புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் கிடைக்கவும் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022-க்குள் அதை செய்து முடிக்கவும்.
ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல் போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து ஆதார், ரேசன் கார்டை லிங்க் செய்யலாம்.
இதற்கு https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.
பின்பு ‘ration card benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவறை பதிவு செய்ய வேண்டும். பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். ஓ.டி.பி.- ஐ பூர்த்தி செய்தால், வேலை முடிந்தது.
தேவையான ஆவணங்களுடன், பொது விநியோக திட்ட அலுவலகம் அல்லது ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்றும் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
https://wbpds.wb.gov.in/(S(cge1fuwqjfeqmucmwnhfwfib))/EKYC_otp.aspx என்ற இணையதளத்திலும் லிங்க் செய்யலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்