விழுப்புரம் செட்டிக்குப்பம் கிராமத்தில் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியதால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 கி.மீ. தூரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதுகுற்த்த வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை உச்சு கொட்ட வைக்கின்றது. 



இதனிடையே விழுப்புரத்தில் பெய்த கனமழையால் ரயில்நிலையத்தில் தண்ணீர் தேங்கியது. தண்டவாளத்தில் இருந்த தண்ணீர் சிறிதுசிறிதாக வெளியேறியதால் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் சீரானது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தேவையான மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.