விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணம்பூண்டி ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணி பேசுகையில், இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மக்களின் பேர் ஆதரவுடன் விரைவில் ஒரு முக்கிய மிகப்பெரிய துறைக்கு அமைச்சராகி மக்கள் தொடர்ந்து செய்ய வர உள்ளதாக எம்பி கௌதம் சிகாமணி பேசினார். மேலும் இதை தொடர்ந்து வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுப் பாதையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு பேசிய பொன்.கௌதம சிகாமணி, உதயநிதி ஸ்டாலினை மக்களின் பேராதரவுடன் துணை முதல்வர் ஆக அமர்த்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக பேசியுள்ளார்.
மிகப்பெரிய துறைக்கு விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி - எம்.பி கௌதம சிகாமணி அதிரடி பேச்சு
சிவரஞ்சித் | 03 Dec 2022 06:38 PM (IST)
விழுப்புரம்: திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூடிய விரைவில் ஒரு மிகப்பெரிய துறைக்கு அமைச்சராகி மக்கள் தொண்டு செய்ய வர உள்ளதாக எம்.பி கௌதம சிகாமணி பேச்சு.
உதயநிதி ஸ்டாலின், எம்பி கௌதம சிகாமணி