ஈசிஆரில் வேன் கவிழ்ந்து விபத்து; 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் வேன் டயர் வெடித்து கவர்ந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இரண்டு பேர் படுகாயம்.

Continues below advertisement

விழுப்புரம்: மரக்காணம் அருகே இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும்,  2 பேர் படுகாயம் அடைந்தனர்,

Continues below advertisement

புதுவை மாநிலம் அருகில் உள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் இருந்து இரும்பு ராடுகள் மற்றும் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு  மினி வேன் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றது. இந்த வேனை கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(40) என்பவர் ஒட்டி வந்தார். இந்த லோடு ஏற்றி வந்த வண்டியின் மீது  4 தொழிலாளர்கள் அமர்ந்து  வந்துள்ளனர்.  இதுபோல் டிரைவரின் அருகில்  ஒருவர் அமர்ந்து இருந்துள்ளார். இந்த வண்டி மரக்காணம் அருகே நாறவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிர்பாராத விதமாக வண்டியில் பின்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இறந்த மினி வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இதன் காரணமாக வண்டியில் இருந்த இரும்பு ராடுகள் மற்றும் இரும்பிலான கட்டுமான பொருட்களும் சரிந்தது இந்த இரும்பு பொருட்களுக்கு இடையில் வண்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (50 ) அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்  (47 ) மற்றும் பாஸ்கர்(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் டிரைவர் ரவிக்குமார் மற்றும் குமார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை இதைப் பார்த்த  அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் மரக்காணம் போலீசார் மற்றும் மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூன்று பேர்உடல்நிலை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola