விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் கோவிலில் விஜய் டிவி புகழ் என்கின்ற புகழேந்தி தனது மனைவி, பெண் குழந்தை மற்றும் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த பின், குழந்தைக்கு பூ முடி எடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூரில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கடந்த ஆண்டு விஜய் டிவி புகழ் குக் வித் கோமாளிக்கு திருமண நடைபெற்றது.


 



தீவனூர் பொய்யா மொழி விநாயகர் கோவிலில் புகழ் குடும்பத்துடன் சாமி தரிசனம்...


இந்த நிலையில் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் குக் வித் கோமாளி புகழ் -ன் குலதெய்வம் என்பதால் தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்த புகழ் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு பூஜைகள் செய்த பின் தனது பெண் குழந்தைக்கு கோவில் வளாகத்தில் பூ முடி எடுத்தார். தொடர்ந்து தங்களது குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


தீவனூர் பொய்யாமொழி விநாயகர்  ஆலய சிறப்பு:


இந்த ஆலயம் சுமார் 500 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்தது. எனினும் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் இருக்கும் விநாயகர், பொய் கூறியவரை தண்டித்தால் பொய்யாமொழி விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும் நெற்குத்தி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். காரணம் அப்பகுதி மக்களுக்கு நெல் குத்த உதவி செய்ததாக கூறப்படுகிறது. இங்கு விநாயகர், லிங்க வடிவில் காட்சி தருகிறார். பால் அபிசேகம் செய்யும்போது தெளிவாக காண்லாம்.


தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் செல்லும் வழி 


  இந்த ஆலயம் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ளது. திருவண்ணாமலை அல்லது செஞ்சி செல்பவர்கள், வழியிலே தீவனுர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.