Villupuram Schools Colleges Holiday (30-11-2024) விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (30.11.2024) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை எனவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் அறிவிப்பு.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னையில் தென் கிழக்கே 300 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. நாகையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 – 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடையிடையே 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் – குழப்பம் ஏன்?
காற்றின் வேகம், காற்று குவிதலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, முன்னறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டது. அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களில் இது மாறுபட்டது. ஒவ்வொரு கணிப்பின்போதும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் மாற்றம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் பலத்த மழை பெய்யுமா, அல்லது பரவலாக மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்
நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
8மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூரில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் .2,3-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் .2,3-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.