சட்டசபைக்கு பூட்டு போட்டால் உன் எலும்பை உடைத்து விடுவேன் என விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இப்படியான நிலையில் எதிர்க்கட்சியான திமுக தமிழக முதலமைச்சர் விஜயை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அதேசமயம் திமுகவை சேர்ந்தவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ஒருமையிலும் முதலமைச்சர் விஜயை சாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் முதலமைச்சரை சரமாரியாக ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க்கண்டேயன்,  எங்கள் ஊரான வேடநத்தம் கிராமத்தில் அன்பு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்து விட்டாள். இந்த இடத்தில் என்ன பேசினாய், அதுதான் தமிழ்நாடு முழுவதும் சென்று சேர்ந்தது, அதன் காரணமாக எங்கள் அமைச்சர் கீதாஜீவன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் அந்த அன்பு மகளைப் போன்று 3 வயது குழந்தை முதல் 95 வய்து பாட்டி வரை உன்னுடைய ஆட்சியில் யாராலும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. 

அரசு ஊழியர்களே உங்களுக்கு பணிக்காலத்தில் சேர வேண்டிய மொத்த பணத்தை விஜய் ஆட்சி முடியும் வரை வேண்டாம் என சொல்லி விடுங்கள். ஆங்காங்கே உங்களை கொலை செய்வதற்கு தவெக கட்சிக்காரர்கள் ரெடியாகி விட்டார்கள். நீ என்ன வழக்கு போட்டு விடுவாய், எம்.எல்.ஏ.வை விலை பேசுவேன் என சொல்கிறார். மானம்கெட்ட பய, இவனுக்கு தகுதி இல்லாதவங்க தான் கட்சியில் இருக்கிறார்கள். அடுத்தநாள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை முதலமைச்சருக்கு கிடையாது. அமைச்சருக்கு கிடையாது. 

Also Read: சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?

இருக்கும் அமைச்சர்கள் எல்லாரும் குற்றவாளிகள். ஊழலின் மொத்த உருவம் முதலமைச்சர் விஜய். ரூ.100 டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பவர். ரூ.150 கோடிக்கு கருப்பு பணம் வாங்கியிருக்கிறார். உன்னால் என்ன செய்ய முடியும்?.. எங்களுடைய தலைவர்களை அவமரியாதை செய்தால் உங்களை அடித்து விரட்டவும் தயங்க மாட்டோம். சட்டமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கு எது பேசினாலும் அடிப்போம். 

எங்களைப் பார்த்தால் கோமாளி மாதிரி தெரிகிறதா?.. சட்டமன்றத்தை பூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது. யார் ஓடியது?, கரூர் சம்பவத்தில் கைது பண்ணி விடுவார்கள் என இரவோடு இரவாக ஓடியது நீதான். பேயடிச்சவன் மாதிரி சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். கொத்து பரோட்டா போடுவேன் என சொல்கிறார். உன்னை மாதிரி ஆயிரம் பரோட்டாவைப் பார்த்தவன் நான் என திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக வலைத்தளத்தில் தவெகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.