நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டமானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு ஆலோசனை முடிவுகள் எடுக்கப்பட்டடன. இதையடுத்து, கூட்டத்தின் முடிவில் சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 105, சன்னரக நெல்லுக்கு ரூ. 130, கூடுதல் ஊக்கத்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையானது வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை:
மத்திய அரசு அண்மையில் கரீப் 2024 2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.300/-என்றும். சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2320/- என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 கரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.
2025-26 நிதியாண்டு:
இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும், அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.