சாமானிய வணிகர்களை அச்சுறுத்தும் கார்ப்பரேட் - விக்கிரமராஜா

வரி வசூல் என்பது அதிகப்படியான சுமையை மக்களுக்கும், வணிகர்களுக்கும் தந்து வருகிறது. இலவசங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Continues below advertisement

இந்தியா முழுவதும் சாமானிய வணிகர்களை அச்சுறுத்தி கொண்டுள்ள கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் வியாபாரிகள் காணாமல் போகும் அவலம் ஏற்படும் என கரூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

Continues below advertisement


கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள கரூர் மாவட்ட நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா வணிகர் சங்க கொடியை ஏற்றி வைத்து, நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு வரும் மே, மாதம் 5 ஆம் தேதி சென்னை மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் 5 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்போம் என தீர்மானித்து உள்ளனர். தமிழக அரசு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுமானால் உடனடியாக ஆயுள் தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த அறிவிப்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் வகையில் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டமாக அமைய உள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி.


இந்தியா முழுவதும் சாமானிய வணிகர்களை அச்சுறுத்தி கொண்டு உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் வியாபாரிகள் காணாமல் போகும் அவலம் ஏற்படும். எனவே வணிகர்களை பாதுகாக்க மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். குப்பை வரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வேறுபட்டு உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும். வரி வசூல் என்பது அதிகப்படியான சுமையை மக்களுக்கும், வணிகர்களுக்கும் தந்து வருகிறது. இலவசங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். காலாவதியான டோல்கேட்டுகளை அகற்றுவோம் என மத்திய அரசு அறிவித்தது. அதனை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை போல் ஆண்டுதோறும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் அனைத்து அமைப்புகளையும் இணைத்து தமிழகம் தழுவிய அளவில் டோல்கேட் முன்பு போராட்டத்தை கையில் எடுப்போம். இனக்கவரி செலுத்துகின்றவர்களுக்கு 18 சதவீதம் வாடகை விகிதத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு புதிய வரி சுமைகளை போட்டு மக்களை வாட்டி வதைக்க வேண்டாம். 


கரன்சி முறையை முழுமையாக ஒலித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒருமுனை வரியாக்க வேண்டும். உள்நாட்டு வணிகர்கள் மட்டும் ஆன்லைன் வணிகம் செய்ய வேண்டும். வெளிநாட்டவர்களின் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு வங்கி மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola