Breaking Live : கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை
Breaking Live : உலகம் முழுவதும் அடுத்தடுத்து நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக் மூலமாக கீழே காணலாம்.
கர்நாடகாவின் கபினி அணையில் 5,000 கன அடியும், கேஆர் எஸ் அணையில் இருந்து 13,286 கன அடியும் நீர் திறக்கபட்டுள்ளது.
மே மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தபோது அறை பூட்டி இருந்ததால் அந்த குறிப்பிட்ட அறை மட்டும் சோதனை செய்யப்படவில்லை
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீட்டின் ஒரு அறையில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை ட்வீட் பதிவிட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி சென்னையில் கைது. முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்தது சைபர் க்ரைம் போலீஸ் கைது செய்தது
ஆளூம் அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம். கூட்டத்தை கலைக்க போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசிய காவல்துறை.
அதிபர் கோட்டபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல்!
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக சென்னை சி.ஐ.டி.நகரில் வசித்து வரும் செந்தில்குமார் ஆறுமுகசாமி என்பவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ல் ஆறுமுகசாமிக்கு தொடர்புடைய சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சோதணையின் போது கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெறுவதாக தகவல்.
கோடநாடு வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக செந்தில்குமார் என்பவரிடம் 3-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. செந்தில்குமார் என்பவர் செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடட் என்ற நிர்வாக இயக்குனர் ஆவார்.
திமுக ஆட்சியில் தான் அண்ணாமலையார் கோவிலில் பணிகள் நடைபெற்றன - முதலமைச்சர் ஸ்டாலின்
புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பில் 246 திட்டபணிகளுக்கு அடிக்கல். 1,71,169 பயணாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.
நீலகிரியில் உள்ள அவலாஞ்சியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது
கர்நாடகாவில் காலை 6.24 மணியளவிலும், காலை 6.29 மணியளவிலும் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையொட்டி நாமக்கல் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
உலகளால் 55.95 கோடி நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இன்று முதல் கோயம்பேடு - அண்ணாநகர் வழித்தடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
Background
பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுடப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழிந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காலையில் பேசிய தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, முன்னாள் பிரதமர் அபே நாராவில் சுடப்பட்டதாக தெரிவித்தார்.
சுட்டு கொலை செய்யப்பட்ட நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார். சுட்டவரின் பெயர் 41 வயதான டெட்சுயா யமகாமி என தெரிய வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அபே சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஷின்ஸோ அபேவை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த நபர் தப்பி ஓட முயன்றபோது, போலீசார் அவரை துரத்திச் சென்று சுற்று வளைத்து பிடித்தனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அதை நேரடியாக பார்த்த இளம்பெண் இதுகுறித்து கூறுகையில், "அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒருவர், அவரை சுட்டார்.
முதல் குண்டு வெடித்தபோது ஒரு பொம்மை துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்தது போல இருந்தது. அவர் விழவில்லை, பின்னர், ஒரு பெரிய குண்டு வெடித்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது தெளிவாக தெரிந்தது. நீங்கள் தீப்பொறி மற்றும் புகையை தெளிவாக பார்க்க முடிந்தது. இரண்டாவது குண்டு வெடித்த பிறகு, மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருக்கு இதய மசாஜ் செய்தனர்" என்றார்.
இதையடுத்து, இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -