மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா குழு அறிக்கை வெளியானது தொடர்ந்து, நடிகைகள் பலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.


 


சீமான்  பேசியது


 


இந்த தருணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் தெரிவித்ததாவது “ சினிமா துறையில் மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும் நடைபெறுகிறது, சினிமா துறை புகழ் வாய்ந்து இருப்பதால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என தெரிவித்திருந்தார். இதுபோன்ற செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. இங்கு நான், நீங்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டால் தடுக்க முடியும். இதுபோன்ற நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை அனைவருக்கும் உள்ளது என தெரிவித்திருந்தார்.


 


விஜயலட்சுமி வீடியோ வெளியீடு:


 


சீமான் பேட்டி கொடுத்ததையடுத்து, விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது “ எப்படி சீமான் இப்படி நடிக்கிறீங்க, அந்த நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து , இந்த வீடியோவில் பேசிட்டிருக்கேன். நீங்கள் விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி, அந்த பெண்ணோட வாழ்க்கையை 14 வருடமா சீரழித்து, தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமா, அநியாயமா கர்நாடகாவுக்குள் போட்டீங்களே, அதுதான் உலகுக்கே தெரிந்த விசயமாச்சே, 2008 ஆம் ஆண்டு, உங்க அலுவலகத்திற்கு , எங்க அக்கா குழந்தையை கடத்திட்டாங்கனு வந்து நின்னோமே , அப்ப என்ன பன்னுனிங்க.! நீங்க காப்பாத்துனுங்களா, அதே அலுவலகத்தில் வைத்து , என வாழ்க்கையை சீரழிச்சிங்க , மறந்துட்டீங்களா!


 






உங்களிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என சீமான் என விஜயலட்சுமி தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.