திராவிட மாடல் ஆட்சி என சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என தவெக மாநாட்டில் திமுகவே நேரடியாக விமர்சித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். 


தவெக மாநாட்டில் பேசிய விஜய், "அரசியல் எதற்கு நடித்தோமா நான்கு காசு பார்த்தோமா எனதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன்.  நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம் இல்லையா? நம்மை வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா? என நினைத்தேன், அதனால்தான் அரசியலுக்கு வந்தேன்.


"மோடி மஸ்தான் வேலை"


இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது அந்த கலரை பூசுவது என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது. இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது, அந்த கலரை பூசுவது என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது, திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழகத்தின் இரண்டு கண்கள்.


திராவிடம் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். பெரியாரின் கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்றார்.


விஜய் என்ன பேசினார்?


தமிழ்நாடு அரசியல் களத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.



இப்படியிருக்க, நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.


இதையும் படிக்க: TVK Maanadu LIVE: பாஜக - திமுகவை தாக்கி பேசிய தவெக தலைவர் விஜய்