தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என தவெக தலைவர் விஜய் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது.

 

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்:

 

இந்த நிலையில், தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "கூட்டணிக்கு வருபவர்களை அரவணைப்போம். தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்" என்றார். 

கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசிய விஜய், "இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது அந்த கலரை பூசுவது  என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVK க்கு எந்த சாயத்தையும் பூச முடியாது,இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது, அந்த கலரை பூசுவது  என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVK கங்கு எந்த சாயத்தையும் பூச முடியாது, திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழகத்தின் இரண்டு கண்கள்" என்றார்.


விஜய் பேசியது என்ன?


கூத்தாடி என தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி அளித்த விஜய், "என்னை கூத்தாடி விஜய் கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும் ஆந்திரா ஊரு வாத்தியாரே என்.டி.ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள்.


கூத்தாடி என்றால் என்ன கெட்ட வார்த்தையா கூத்து இந்த மண்ணின் அடையாளம். திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்துதான்" என தனது மீதான விமர்சனத்திற்கு பதிலடி அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நம்மை விசிலட்டாஞ்குஞ்சு என யாரும் சொல்லி விடக்கூடாது. நாம்தான் உரத்த குரலில் நமது கொள்கைகளை பேச வேண்டும்" என்றார்.