தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை விஜய் சந்தித்த பிறகு விஜய்யின் அரசியல் நடவடிக்கை இதுவாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் 2 ஆயிரத்து 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன உணவுகள்?
தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவுகளின் பட்டியலை கீழே காணலாம்.
1. காரட் அல்வா
2.மசால் வடை
3. காளிப்ளவர் 65
4. பூரி
5. உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
6. வெஜிடபிள் பிரியாணி
7.தயிர் பச்சடி
8. சாதம்
9. கதம்ப சாம்பார்
10. அப்பளம்
11. பூசணிக்காய், செள செள, காரட், பீன்ஸ் கூட்டு
12. ரசம்
13.மோர்
14.சாலட்
15. வாழைப்பழம்
16.பீன்ஸ் பருப்பு உசிலி
17.வெண்ணிலா ஐஸ்கிரீம்
18.ஊறுகாய்
19. தண்ணீர்
20. அடை
மேலே கூறிய விதவிதமான உணவுகள் தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பவர்களுக்கு பரிமாறப்பட உள்ளது. முழுக்க முழுக்க சைவ விருந்தாக வழங்கப்பட உள்ள இந்த விருந்திற்காக அதிகாலை முதல் உணவுகள் தீவிரமாக தயாராகி வருகிறது.
இதற்காக நூற்றுக்காணோர் சமையற்கலைஞர்கள் சமைத்து வருகின்றனர். நிர்வாகிகளும், தொண்டர்களும் அமர்ந்து சாப்பிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உணவுகள் பரிமாற 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவெக தொடக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்சி விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் காளியம்மாள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.