Vijay Sethupathi: உச்சநீதிமன்றத்திற்கு சென்ற விஜய்சேதுபதி..! உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு..! நடந்தது என்ன..?

அவதூறு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு செய்துள்ளார்.

Continues below advertisement

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Continues below advertisement

தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பின்னணி:

கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் நடந்து சென்ற விஜய் சேதுபதி மீது திடீரென்று ஒரு நபர் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனைத்தொடர்ந்து, விஜய் சேதுபதியை தாக்கிய நபர் சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் மகா காந்தி என்று தெரியவந்தது.

விமானத்தில் நடிகர் மகாகாந்திக்கும், விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதத்தின் போது மகாகாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 



உயர்நீதிமன்றத்தில் விசாரணை

இந்த நிலையில்,  பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைத்தவர், விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில்,  சைதாபேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இவ்வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இவ்வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

Also Read: Vijay Sethupathi Interview : `பெர்சனல் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்!’ - கடுப்பான விஜய் சேதுபதி

Also Read: Vijay Sethupathi Speech : ப்ளு சட்டை மாறனுக்கு விஜய்சேதுபதி பதிலடி!

Continues below advertisement
Sponsored Links by Taboola