கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுடன் 600-க்கும் மேற்பட்ட நூல்களுடன் விஜய் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்று 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.




 


விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதற் கட்டமாக "விஜய் நுாலகம்" கடந்த 18ஆம் தேதி 11 இடங்களில் துவங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக 21 இடங்களில் திறக்கப்படுகிறது. நடிகர் விஜய் உத்தரவின் படி ஏற்கனவே விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் "விஜய் நூலகம்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


 


 




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் "விஜய் நூலகம்" அரவக்குறிச்சி ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் நூலகத்தை திறந்து வைத்தார். அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி கையேடு என 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. திறப்பு விழா நிகழ்ச்சிகள் பங்கேற்ற பொதுமக்கள் 10 பேர் நூலகத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.


 




 


 


புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் விஜய் நூலகம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே அரவக்குறிச்சியில் "விஜய் பயிலகம்" தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருவதை முன்னிட்டு  நூறாவது நாள் விழாவும் நடைபெற்றது. இதுகுறித்து நூலக பொறுப்பாளர் கூறுகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயிலக்கூடிய அளவில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிலக்கூடிய அளவில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது” என்று கூறினார்கள்.