தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் இருந்து புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்து BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நுழைவு வரி செலுத்த தாமதம் ஆனதால், 400% அளவுக்கு வணிகவரி துறை அபாராதம் விதித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் அபாராதம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி சி.சரவணன் இம்மனு விசாரனையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், மனுவை விசாரிக்கும் வரை, BMW காருக்கு விதிக்கப்பட்ட அபராதம் செலுத்த வேண்டாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயிடம் இருக்கும் கார் கலெக்ஷன்களை பொருத்தவரை, நிசான் எக்ஸ்-டிரெயில் இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் இல்லை, அனால் விஜயிடம் ஒன்று உள்ளது. தனது டொயோட்டா காரை விஜய் தனது தினசரி தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார். இயக்குநர் ஷங்கருக்குப் பிறகு, ஆர் பேட்ஜுடன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டை சொந்தமாகக் கொண்ட இரண்டாவது தமிழ் பிரபலம் நடிகர் விஜய்தான். பி.எம்.டபிள்யூ ரேஞ்ச் கார்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும் இவரிடம் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6-ஐ வகை கார்கள் இவரிடம் உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்