இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கிரண் ரிஜ்ஜூ. இந்த நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதாவது, நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள்  கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 13 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






இவர்கள் நாட்டின் முக்கியமான உயர்நீதிமன்றங்களான அலகாபாத் நீதிமன்றம், கர்நாடகா நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் கீழ் வருமாறு:



  1. வழக்கறிஞர் சையத் ஓமர் ஹசன் ரிஸ்வி,

  2. வழக்கறிஞர் மணீஷ்குமார் நிகம்

  3. வழக்கறிஞர் அணீஷ்குமார் குப்தா

  4. வழக்கறிஞர் நந்த பிரபா சுக்லா

  5. வழக்கறிஞர் ஷித்ஜி சைலேந்திரா

  6. வழக்கறிஞர் வினோத் திவாகர்

  7. வழக்கறிஞர் விஜய்குமார் அடகௌடா பட்டீல்

  8. வழக்கறிஞர் ராஜேஷ்ராய் கல்லங்கலா

  9. வழக்கறிஞர் லட்சுமணா சந்திரா விக்டோரியா கவுரி

  10. வழக்கறிஞர் பிள்ளைபாக்கம் பாகுகுடும்பி பாலாஜி

  11. வழக்கறிஞர் கந்தசாமி குழந்தைவேலு ராமச்சந்திரன்

  12. ஜூடிசியல் ஆபீசர் கலைமதி ராமச்சந்திரன்

  13. ஜூடிசியல் ஆபீசர் திலகவதி


மேற்குறிப்பிட்டவர்கள் கூடுதல் நீதிபதிகளாக பதவி அளிக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றம். கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


விக்டோரியா கவுரி:


சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமணா சந்திரா விக்டோரியா கவுரி, வழக்கறிஞர் பிள்ளைபாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, வழக்கறிஞர் கந்தசாமி குழந்தைவேலு ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் கலைமதி ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் திலகவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், அவர் இன்று அதிகாரப்பூர்வமாக கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலிஜியம் அமைப்பு இவரது பெயரை பரிந்துரை செய்தது முதலே சர்ச்சை வெடித்து வந்தது. விக்டோரியா கவுரி பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அவர்களது எதிர்ப்பையும் மீறி இன்று அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Erode East By Election: வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்.. இரட்டை இலை சின்ன வேட்பாளருக்கு ஆதரவு என அறிவிப்பு!


மேலும் படிக்க: ADMK: ‘இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும்’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!