சுக்கிரன் சிம்மத்துக்குள்ள வந்தாச்சு" - "காசு பணம் கூடியாச்சு"!!!
அன்பார்ந்த வாசகர்களே சிம்ம ராசிக்குள் சுக்கிரன் நுழைந்து விட்டார் சுக்கிரனுக்கு சிம்ம வீடு மிகவும் பிடித்தமானது... எப்படி என்றால் வீட்டில் பெண் பிள்ளைகள் பிறந்து விட்டால்... அவர்களே வீட்டை ஆள்பவராக... தந்தைக்கு செல்ல பிள்ளையாக... குடும்பத்தை வழிநடத்தக்கூடிய ஹோம் மினிஸ்டராக.... வீட்டு செல்வத்தை நிர்வாகிக்க கூடிய பொருளாதார மந்திரியாக என்று அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பார்த்துக் கொள்வார்கள்...
இவர்களுக்கு இயற்கையிலேயே சூரியனின் சக்தி உள்ளது என்பதை சிம்மத்தில் நுழைந்த சுக்கிரன் அதே போன்று சக்தியை அனைவருக்கும் தரப் போகிறார்... குறிப்பாக பெண்களால் ஆதாயத்தை குடும்பத்திற்கு கொண்டு வருவார்... சிம்மத்தில் ஏற்கனவே கேது பகவான் அமர்ந்து பல ஞானங்களை கொடுத்து உங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சுக்கிரன் வந்து அதை அதிபயங்கர சக்தியாக மாற்றப் போகிறார்....
மேஷ ராசியை பொருத்தவரை ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் இணைவது பிள்ளைகள் வழியில் நல்ல யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும் அதேபோல அவர்கள் எண்ணமும் அறிவும் சிந்தனை ஆற்றலும் மிகச் சிறப்பாக செயல்படும்.,..
ரிஷப ராசி பொருத்தவரைக்கும் ராசி அதிபதியே நான்காம் வீட்டில் அமர்வதால் வாகனம் உண்டாக வாய்ப்பிருக்கிறது...
மிதுன ராசியை பொருத்தவரை மூன்றாம் இடத்தில் வைத்திய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து நல்ல தைரியத்தை கொடுக்கப் போகிறார்...
கடக ராசியில் பிறந்தவருக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்தில் தன ஸ்தானத்தில் அமர்ந்தால் பொருளாதார உயர்வு உண்டாகும்...
சிமத்துலையே சுக்கிரன் அமர்வதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும் வேலை ஆட்களால் நன்மை உண்டு...
கன்னி ராசியைப் பொறுத்தவரை சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருப்பதால் என்ன விதமான செலவுகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்த்த ஒரு நல்ல வேலையாக அமையும்...
துலாம் ராசி பொருத்தவரை 11ஆம் வீட்டில் ராசி அதிபதி அமர்ந்து பொன் ஆபரணங்களை சேர்க்கும் ஒரு வழியை காட்டுவார்...
விருச்சிக ராசி பொருத்தவரை பத்தாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து தொழில் ரீதியான வெற்றிகளையும் பல முன்னேற்றங்களையும் கொண்டு வரப் போகிறார்...
தனுசு ராசி பொருத்தவரை ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்து பெண்களால் முன்னேற்றம் ஆதாயம் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேர்வது வாகனங்கள் வாங்குவது போன்றவையால் மகிழ்ச்சி அடைகிறீர்கள்...
மகர ராசி பொருத்தவரை அஷ்டமத்தில் சுக்கிரன் அமர்ந்து திடீர் அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் கொண்டு வருகிறார்...
கும்ப ராசியை பொறுத்தவரை ஏழாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து இரண்டு நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் மற்றும் கணவன் மனைவி ஒற்றுமையை போன்றவற்றை கொடுப்பார்..
மீன ராசியை பொறுத்தவரை ஆறாம் இடத்தில் சுக்கிரன் வந்து நாள்பட்ட கடன்களை அடைக்கவும் புதிய பொருளாதார வசதிகளில் உயரவும் வைப்பார்…
இப்படியாக சுக்கிரன் சிம்மத்தில் அமரும்போது பல வகையான நன்மைகளை வாரி வழங்கப் போகிறார் பெண் அலங்கார வடிவங்களில் இருக்கக்கூடிய தெய்வங்களை நீங்கள் வணங்கினால் உங்களுக்கு சுக்கிரனால் கிடைக்கக்கூடிய பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.... குறிப்பாக வீட்டை காலையில் எழுந்து சுத்தம் செய்து விட்டு... மனமனக்கும் வகையில் ஊதுபத்திகளை ஏற்றி... தெய்வங்களை வழிபடலாம் அதேபோல மகாலட்சுமியை வழிபட்டு அவருக்கு நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் படைப்பது சுக்கிரனால் பெறக்கூடிய மிக நல்லவைகளை உங்களுக்கு கொண்டு வரும்.... நன்றி வணக்கம்!!!