கொரோனாவா... அப்டினா என்ன என்று  கேட்கும் கொடைக்கானல் வெள்ளகெவி கிராம மக்கள், மூலிகை காடு மற்றும் அடர்ந்த வன பகுதியின் நடுவில்  பல நூறு ஆண்டுகளாக வசிக்கும் கிராம மக்கள், எந்த வைரசும் எங்களை அண்டாது என கூறுகின்றனர். 



திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் உருவாகுவதற்கு  அடிப்படையாக இருந்தது  வெள்ளகெவி கிராமம், இந்த கிராமமானது சுமார் 400 வருடங்களுக்கு முன்பே தோன்றியதாக  அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் 150 குடும்பங்களும்  400க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்க செல்வதற்கு  சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே நடந்து தான் செல்ல முடியும் மேலும் வெள்ளகெவி கிராமத்தில் இருந்து  கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும், 



வெள்ளகெவி கிராமம் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு ஏலக்காய்,காபி,அவக்கோடா,மிளகு உள்ளிட்ட மலை பயிர்கள் விவசாயம் செய்யப்படப்படுகிறது,இங்கு விளைவிக்கும் விளை பொருட்களை தலை சுமையாகவும் ,குதிரைகள் மூலம் கொண்டு சென்று கொடைக்கானல் , பெரியகுளம் பகுதியில் விற்று தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவது பல்வேறு பகுதிகளில் நோய் தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இன்னிலையில் இந்த கிராமத்தில் கொரோனா தொற்று  என்றால் என்ன அது எப்படி இருக்கும் எனவும் எங்களது கிராமத்தில் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை என கூறுகின்றனர் கிராம மக்கள், இதனை பற்றி கிராம மக்களிடம் கேட்கும்  போது இது வரை சளி, காய்ச்சல் ,தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்வதாகவும், இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும் மூலிகை வன பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால்   நோய் தொற்று இல்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.



,மேலும் முகக்கவசம் இல்லாமலும் வழக்கம் போல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர் மேலும் இந்த கிராமத்தில் மலையேற்ற பயணத்தில் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்தில் தங்கி செல்வது வழக்கம் கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும் தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர், இந்த கிராமத்தை சுற்றி  24 காவல் தெய்வங்கள் இருப்பதாகவும் கிராமத்திற்குள் வருபவர்கள் காலணிகளை  அணியாமல் தெய்வங்களுக்கு பயந்து வெறும் கால்களில் ஊருக்குள் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர்.



வெளியூர் மக்களையும் காலணிகள் அணியாமல் வர வேண்டுமென அறிவுருத்தி வருகின்றனர். இன்று வரையில் இந்த கிராமத்தில் கொரோனா நொய் தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை எனக்கூறுகின்றனர். இந்த  வெள்ளகெவி கிராமத்திற்கு சென்று திரும்புவதற்கு கொடைக்கானலில் இருந்து காட்டு பகுதியாக சென்று வர 8 மணி நேரம் ஆகுவதாகவும், தங்கள் பகுதியில் இது வரை சாலை வசதிகள் இல்லை எனகூறிய கிராம மக்கள் விரைவில் சாலை வசதி செய்து தர வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கின்றனர்.