நகர்ப்புறம் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/- வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மதியம் வரை தோராயமாக 8 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் பின்வரும் விவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிபிட்ட நியாயவிலைக்கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அரசின் இந்நடவடிக்கையால் நேற்று வரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.150/- என்று விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.90-100 வரை எனவும் மேலும் இதர காய்கறிகள் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளது.


முன்னதாக, தக்காளி விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்ப்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த மூன்று நாட்களாக 100 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 


தமிழ்நாடு முழுவதும் பரவலான மழை காரணமாகவும், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கடுமையாக ஏறியுள்ளது.


தக்காளி விலையை தொடர்ந்து, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண