இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜகவின் கொடி பறந்தாலும் தமிழ்நாட்டில் அதனால் பறக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் நடந்த கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றது. 


இருப்பினும் 4 எம்.எல்.ஏக்களை 40 ஆக்கும் முயற்சியில் அக்கட்சியின் தலைமை தீவிரம்  காட்டிவருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக கட்சிக்கென அலுவலகங்கள் கட்டப்படவுள்ளன. முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் அலுவலகங்கள்கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. 


 






அந்தவகையில் திருப்பூரில் இருந்து பல்லடம்  செல்லும் சாலையில் பாஜகவுக்கு புதிய அலுவலகம்  கட்டப்பட்டுள்ளது.  இந்தக் கட்டடத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்துவைத்தார். முன்னதாக பாஜக மாநில செயற்குழு கூட்டம் பல்லடம் சாலையில் இருக்கும் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  




இந்தக் கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏக்கள்  வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா வெற்றி வேல் வீர வேல் என்று கூறி தனது உரையை தொடங்கினார்.அதனையடுத்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியாக மாறியிருக்கிறது. பாஜக மட்டும்தான் தற்போது ஜனநாயகத்தோடு இருக்கிறது. 




குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கிறது. அது மக்களுக்கு நல்லதல்ல. இந்தியாவில் குடும்ப அரசியல் இல்லாத கட்சியாக பாஜக மட்டுமே திகழ்கிறது.  மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில்  பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார்.தமிழ்நாட்டின் பண்டிகையையும்,கலாசாரத்தையும் திமுக மாற்ற முயற்சிக்கிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Vedha Nilayam: ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!