தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாத என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதையை கீழே விரிவாக காணலாம்.
- 1980களின் இடைப்பகுதியில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை
- 1987ம் ஆண்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் வட தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம்
- 3.1989ம் ஆண்டு வன்னியர்கள் உள்பட 108 சமூகத்தினரை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ( எம்.பி.சி) என்ற புதிய பிரிவு கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
- பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவு உருவாகியது.
- புதியதாக உருவாக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
- எம்.பி.சி. பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
- 2021ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் 2020ம் ஆண்டு அக்டோர் மாதம் அறிவிப்பு
- 2021ம் ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் சட்டம் நிறைவேற்றம்
- புதிய அறிவிப்பின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடும், 68 சமூகத்தினருக்கு 7 சதவீதமும், 22 சமூகத்தினருக்கு 2.5 சதவீதமும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
- அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தற்காலிக ஏற்பாடுதான் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேற்ற பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிப்பு
- வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்திற்கு எம்.பி.சி. பிரிவில் இடம்பெற்றிருந்த பிற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
- 2021ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி வன்னியர்கள் உள் ஒதுக்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டது.
- வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற சென்னை கிளையில் விசாரணைக்கு வந்தது
- 2021 நவம்பர் 1-ந் தேதி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி தீர்ப்பு
- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதால் அதே பிரிவில் உள்ள 22 சமூகத்தினருக்கு 2.5 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என்று நீதிமன்றம் கருத்து
- 2022 பிப்ரவரி 8 : மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
- 2022 மார்ச் 31 : வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் மிகவும் பற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடான 20 சதவீத அமலில் இருக்கும்போது, அதில் திருத்தம் கொண்டு வராமல் சட்டம் இயற்றப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.