Vande Bharat Rail: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் 25ஆம் தேதி சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 


கிறிஸ்துமஸ் பண்டிகை:


உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு மட்டும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.


இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் 640  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, கேரளா, தென் மாவட்ட மக்கள் பெருமளவு, விமானங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து கேரளா உள்ளிட்ட, உள்நாட்டு விமானங்களில், பயணிகள் டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.  மேலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. 


சிறப்பு வந்தே பாரத் ரயில்:






இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை சென்டிரலில் இருந்து கேரள மாநிலம்  கோழிக்கோடுக்கு வரும் 25ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  வண்டி எண் (06041) ரயில், சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு, கோழிக்கோடுக்கு மாலை 3.20 மணிக்கு சென்றடைகிறது.  


சென்னை சென்டிரல் காலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கோழிகோட்டில் மாலை 3.20 மணிக்கு சென்றடையும்.  கிறிஸ்துமஸ் அன்று இயக்கப்பட உள்ள சிறப்பு வந்தே பாரத் ரயிலை (06041) மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. 




மேலும் படிக்க


Chandrababu Naidu: ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு யாகம்..! அதிரடி திட்டங்களுடன் ஜெகன் மோகன் - ஆந்திர அரசியல் கள நிலவரம்


Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி