வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் கூடுதல் ரயில்கள்
ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 23 அன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), கன்னியாகுமரியில் இருந்து மாலை 05.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.54 மணி மற்றும் அதிகாலை 12.53 மணி) நின்று செல்லும். இதே போல டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழி கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), கொல்லத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.20 மணி மற்றும் இரவு 09.38 மணி) நின்று செல்லும்.
- ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரை கையை நீட்டி நிறுத்திய காவலர் - சுவரில் மோதி விபத்து
செந்தூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலில் இருந்து இயக்கம்
வெள்ள பாதிப்பிற்கு பிறகு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் பாதை சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக டிசம்பர் 21 சென்னையில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரையும், டிசம்பர் 22 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்தும் இயக்கப்படும். இதே போல டிசம்பர் 22 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்தும், பாலக்காட்டில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் முன் பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரையும் இயக்கப்படும்.
திருநெல்வேலி சிறப்பு ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர ரயில் (06069) டிசம்பர் 22 முதல் ஜனவரி 19 வரையும், திருநெல்வேலி - சென்னை வாராந்திர ரயில் (06070) டிசம்பர் 28 முதல் ஜனவரி 18 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!