கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்படபலகையில், சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


வ.உ.சி பேரவை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் குவிந்துள்ளனர். தற்போது லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு முதலில் அசுத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும் அனைவருக்கும் சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி சுத்தம் செய்ய முற்பட்ட போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்யக் கூடாது யார் சாணியை பூசினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு சுத்தம் செய்ய வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




 


மேலும் கரூரிலிருந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அதிநவீன வாகனம்


கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அதிநவீன துரித செயல் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. மேலும் குளித்தலை மற்றும் தரகம்பட்டியில் புதிய தீனைப்பு நிலையம் அமைக்க கோரி பல ஆண்டுகளாக பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அதிநவீன துரித செயல் வாகனம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்மூலம் 200 அடிக்கு முன்பாகவே, தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி தீயை கட்டுக்குள்ள கொண்டுவர முடியும்.


 


மேலும், இந்த வாகனத்தில் 60 மீட்டர் நீளம் கொண்ட ஒரே குழாய் பொருத்தப்பட்டுள்ளது.இதனால், தண்ணீரின் முறையை அதிக அளவில் பயன்படுத்தி, தீயை அணைக்க முடியும். மழை மற்றும் அவசர இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் இந்த வாகனத்தில் நான்கு பேர் செல்ல முடியும், மழை மற்றும் வெயில் வாகனம் சேதமடையாமல் இருக்க மூன்று பக்கங்களிலும் ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், தடையில்லாமல் தீயை அணைக்க, இந்த புதிய அதிநவீன துரித செயல் வாகனம் பயன்படும். கருர் தீயணைப்பு நிலையத்துக்கு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய தீயனைப்பு வாகனத்தின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் உதவியாளர் உள்ள சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.




வயலூர் பஞ்சாயத்தில் தூய்மை பணி.


வயலூர் பஞ்சாயத்து கிராமத்தில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலையோர பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கோடங்கிபட்டி, சரவணபுரம், சாலையோரம் மற்றும் பகவதி அம்மன் கோவில் சாலை ஆகிய இடங்களில் வளர்ந்த செடிகளை அகற்றி தூய்மை பணி செய்யப்பட்டது. தொடர்ந்து சாலையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் டயர்கள் தனியாக தரம் பிரிக்கப்பட்டது. இப்பணியில், பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர் பணிகளை பஞ்சாயத்து நிர்வாகம் பார்வையிட்டது.