முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் இருந்த சசிகலா ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டணை பெற்று விடுதலை அடைந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தன்னுடைய பினாமி பெயரில் வாங்கிய 15 கோடி ரூபாய் சொத்துகளை தற்போது வருமான வரித்துறை முடக்கம் செய்துள்ளது. 


சென்னை தி.நகர் பத்மா தெருவிலுள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என்பது உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது அந்த சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. 


 






தற்போது வரை சசிகலாவிற்கு தொடர்பு உடைய சுமார் 2000 கோடி ரூபாய் சொத்துகள் வரை முடக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தச் சூழலில்  சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அதிமுக குழப்பம் தொடர்பாக சசிகலா:


அதிமுகவில் நிலவி வரும் பிரச்னை தொடர்பாக சசிகலா கருத்து ஒன்றை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொண்டர்களை சந்திக்க செல்லும் போது கருத்து ஒன்றை கூறியிருந்தார். அதில், எம்.ஜி.ஆர் மறைவின் போது, இதே போன்ற சூழல் ஏற்பட்டதை, என் சிறுவயதிலே பார்த்துள்ளேன், அதே போன்ற சூழல்தான் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுக கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எங்கள் பிரச்னையை நாங்கள சரி செய்து கொள்வோம் என சசிகலா தெரிவித்தார். அதிமுகவின் பொது செயலாளர் தான் என்று சசிகலா தொடர்ந்து உரிமை கொண்டு வருகிறார். இருப்பினும் அவருக்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண