வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் இணைந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவி தொகை வழங்கப்படுகிறது.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.300 மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து வகையான மாற்றுத்திறன்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 750-ம் மற்ற பட்டதாரிகளுக்கு 1000 ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து பதிவு தாரர்களும் தகுதியானவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இதர வகுப்பினார் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகவும் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. இந்த தகுதி உடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதிபர் வழிபாட்டு மையத்திற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் உடனடியாக நேரில் வரவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 




 


22 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவுக்கு கலெக்டர் அழைப்பு.


கரூர் மாவட்டத்தில் வரும் 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, கரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்டம் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தான்தோன்றிமலை அரசு அறிவியல் கல்லூரியில் வரும் 22ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 150கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.


 




 


எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் தையல் பயிற்சி நர்சிங் பயிற்சி முட்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பு பெறலாம் முற்றிலும் இலவசம் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விபரம் உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்  மற்றும் வேலைவாய்ப்பற்றோர், வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.