சென்னையில் இன்றும், நாளையும் அயலக தமிழர் தின விழா.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

’தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடக்கிறது.

Continues below advertisement

வெளிநாடு வாழ் தமிழர் தின விழாவை (அயலக தமிழர் தின விழா) மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

தமிழ் வெல்லும்:

’தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெறுகிறது. இந்த விழாவானது சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடக்கிறது. 

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினர், கல்வியாளர்கள், கவிஞர்கள் கலந்துகொள்வார்கள். வெளி நாடுகளில் வசிக்கும் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதில் 218 பேர் சர்வதேச தமிழ் சங்கங்களையும், 48 பிற மாநில தமிழ் சங்கங்களையும் சேர்ந்த தமிழர்கள் பங்கேற்கின்றனர். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து, நந்தம் பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 40க்கு மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்தார். மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எனது கிராமம்: 

விழாவில் முதல் நாளான இன்று, சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி.12) நிறைவுரையாற்றுகிறார். விழா பேருரை முடிந்தவுடன் 'எனது கிராமம்' என்ற முன்னோடி திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் மாநில அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள், தாங்கள் கொடுக்க விரும்பும் நிதியை அளிக்கலாம். இதையடுத்து இந்த திட்டத்தின் வாயிலாக தங்களது கிராமத்திற்கு தேவையான மேம்பாடுகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் வகை செய்யப்படும். மேலும், இந்த  நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான கா.சண்முகம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விருது விழா:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் இலக்கியம், மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், கல்வி, சமூக மேம்பாடு, விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். 

அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்பு அளிக்கிறார். அதனை தொடர்ந்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்க ஸ்டார்ட் அப், டிஎன் பேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் முன்னிலை வகிக்கிறார்.

 

Continues below advertisement