கரூரில் போதை தலைக்கேறிய கொள்ளையன் போலீசாரை கண்டதும் திருடி சென்ற இரு சக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தலை தெரிக்க ஓடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கரூர் அடுத்த வெள்ளியணை கடைவீதியில் சுகுமார் என்ற இளைஞர் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு இரவு 11 மணி அளவில், கடைக்கு முன்புறம் தனது எக்ஸெல் சூப்பர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு பின்புறம் அமைந்துள்ள வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் போதை தலைக்கேரிய நிலையில், அப்பகுதிக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரின் சாவியை உடைத்து எடுத்துச் செல்ல முயற்சித்து பலனளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து அருகில் இருந்த பிரியாணி கடை உரிமையாளரின் எக்ஸ்.எல் சூப்பர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து போதையில் தள்ளாடியவாறு சாலையில் குறுக்கும் நெடுக்கமாக தள்ளி சென்று கீழே போட்டு விட்டார். மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு போதையில் தள்ளாடியவாறு அந்த வாகனத்தை திருட முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரோந்து காவலர்களை பார்த்த கொள்ளையன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தலை தெறிக்க ஓடிவிட்டார். அப்போது சாலையில் தனியாக கிடந்த இருசக்கர வாகனத்தை வெள்ளியணை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் ஆயத்தமாகினர்.
இந்த நிலையில் காலை கடையின் முன்பு நிறுத்தி இருந்த வாகனம் காணாமல் போனது குறித்து, வெள்ளியணை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பிரியாணி கடை உரிமையாளர் சுகுமார், அங்கிருந்த தனது இருசக்கர வாகனம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து உரிய ஆவணத்தை காட்டி எடுத்து வந்துள்ளார். தற்போது வாகனத்தை திருட முயற்சித்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளியணை பகுதியில் கடையின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையன் போலீசாரை கண்டதும் தலை தெறிக்க ஓடினான். போதையில் தள்ளாடி கொண்டு வந்த போதை ஆசாமி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அதன் மீது ஏறி ஓட்ட முயற்சித்தான். ஆனால், அதை ஓட்ட முடியவில்லை. நகர்த்திப் பார்த்தான் நகர்ந்து விட்டது. அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, திரும்பி அங்கும் இங்கும் ஆக நடந்த அந்த போதை ஆசாமி, மீண்டும் எடுத்த இடத்திலேயே அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது போதையில் தள்ளாடி அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.