கொரோனா  தொற்றின் இரண்டாவது  அலை கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழகம் முழுவதும் வேகமாக பரவிவருகின்றது . இதனுடைய எதிரொலியாக தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிகரித்துவந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது  குறைந்ததுள்ளது. நாளொன்றுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஐநூறுக்கும் கீழ் குறைந்துள்ளது.



திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 313. கொரோனா  தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 6, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44989. திருவண்ணாமலை மாவட்டத்தின் முழுவதும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6386 . திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மருத்துவமணைகளில் படுக்கைகள்  காலியாகி கொண்டு வருவது நிம்மதியளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 800 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. 



திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், வந்தவாசி, ஆரணி, செய்யாறு போன்ற நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் தொற்று குறைந்த நிலையில் காணப்பட்டு கிராமப்புறங்களில் படிபடியாக குறைந்து கொண்டே வருகின்றது. 






கிராம புறங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் ( மாஸ்க் ) அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் தமிழக அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கிராமபுறங்களில் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்