மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பெரும் திரளான மக்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட நன்றிக் கடிதத்தில், “இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடானுகோடி நன்றி” எனத் தெரிவித்தார்.
“செயல்மொழிதான் அரசியலுக்கான தாய்மொழி”
மாநாட்டின் வெற்றியைப் பற்றி பேசிய அவர், “கபட நாடக மற்றும் பிளவுவாத சக்திகளை மக்கள் மனப்பூர்வமாக நிராகரித்து வரவேற்றது. இது நம் அரசியல் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கியுள்ளது. இனி சற்றும் சமரசமின்றி செயல்படுவோம். ‘செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு மழை
மாநாட்டின் வெற்றிக்காகக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் ஒன்றிணைந்து உழைத்ததாகக் கூறினார். குறிப்பாக,
மாநாட்டைத் தொடக்கம் முதல் நிறைவு வரை ஒருங்கிணைத்த கழகப் பொதுச் செயலாளர்அவருக்கு உறுதுணையாக இருந்த கூடுதல் பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர்மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள்எல்லோருக்கும் அவர் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மாநாடு வெற்றிகரமாக நடைபெற மதுரை மாவட்டக் கழகச் செயலாளர்களான திரு. A. விஜய் அன்பன் நல்லானை, திரு. S.R. தங்கப்பாண்டி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வகித்த பங்கு சிறப்பாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், மாநாட்டு திடல் மற்றும் அரங்கு அமைப்புப் பணிகளை மேற்கொண்ட திரு. M. அறிவு (Me Global Events), மருத்துவ சேவையில் ஈடுபட்ட டாக்டர் T.K. பிரபு தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
காவல் துறைக்கு நன்றி
மாநாட்டில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட தமிழ்நாடு காவல் துறை, அரசு அதிகாரிகள், தனியார் பாதுகாப்புக் குழுவினர், ஊடகத் துறை நண்பர்களுக்கும் அவர் சிறப்புப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலுக்கான நம்பிக்கை
மாநாட்டின் நிறைவில், “1967, 1977 தேர்தலில் நடந்த வரலாற்று வெற்றிகளைப் போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் நமக்காக அத்தகைய வரலாற்றை மீண்டும் நிகழ்த்துவார்கள்” என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.