இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு வருகின்ற 2.9.2025 அன்று ஆண்களுக்கும் மற்றும் வருகின்ற 5.9.2025 அன்று பெண்களுக்கும் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ளது. 
 
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் வெளியிட்டுள்ளார்.
 
அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு
 
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு 8, ASC Air Force Station, (Air Force Road) g, - 600046 முகவரியில் வருகின்ற 2.9.2025 அன்று ஆண்களுக்கும் மற்றும் 5.9.2025 அன்று பெண்களுக்கும் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கு 12 ஆம் வகுப்பு, சமமான கல்வித்தகுதியில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம் பாடப்பிரிவிலும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பில் பங்குபெற 1.1.2026 அன்று 17 1/2 வயதிற்கு மேற்பட்டவராகவும் 21 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
 
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்
 
மேலும் விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04575-240435 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.