நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கான, பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு கட்சியில் முழு கவனம் செலுத்த இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் விஜய்க்கு சிக்கல்
தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம், கட்சி பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். பார்ட் டைம் ஆக விஜய் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. விஜய் கட்சி தொடங்கியபோது, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருந்தார். குறிப்பாக கட்சிக்கு 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் 120 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதிர் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேபோன்று, 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளிலும் தோய்வு ஏற்பட்டுள்ளது.
இதுபோக 68,000 பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளும் முழுமை பெறவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பூத் நிர்வாகிகளை நியமித்து விட்டதாக மாவட்ட தலைமைகள், தவறான தகவல்கள் தெரிவித்து வருவதாகவும், அது விஜய்க்கு தலைவலி ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிகரமாக கோவை மண்டல கூட்டம் முடிந்த நிலையில், மற்ற மண்டலங்கள் கூட்டம் அடுத்து அடுத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டென்ஷனை வெளிப்படுத்தும் விஜய்
கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தாலும் அவை முறையாக செயல்படுத்தவில்லை என்று வேதனை விஜய்க்கு இருக்கிறதாம். இதனால் தான் நினைத்தது நடைபெறாமல் போய்விடுமோ ? என்ற அச்சம் விஜய்க்கு இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். அதேபோன்று சட்டசபை தேர்தலில் தங்களுடன் போட்டியிடும் கூட்டணி கட்சிக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என விஜய் தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு முக்கிய சிறிய கட்சிகள், தங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என விஜய் கணித்திருந்தாராம். ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கட்சியும் விஜய்யுடன் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடாதது, விஜய்க்கு டென்ஷனை அதிகரித்திருக்கிறாராம். கூட்டணி அமையாததும் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சிவப்பு சந்தன மாலை பின்னணி என்ன ?
இந்தநிலையில்தான் விஜய் டென்ஷனை குறைத்து, மன நிம்மதியுடன் இருப்பதற்காக புதுச்சேரியை சேர்ந்த ஜோதிடர் ஒருவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஜோதிடர் கொடுத்த ஐடியாவின்படி, விஜய் தற்போது சிவப்பு சந்தன மாலை அணிந்து வலம் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தனக்கு டென்ஷன் குறையும் என விஜய் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாலையை தொடர்ந்து அணிந்தால் பஞ்சபூதங்களின் ஆதரவு கிடைக்கும், டென்ஷன் குறையும், மன உறுதி அதிகரிக்கும் எனவும் விஜய்க்கு அவர் கூறியுள்ளார். இதனாலே தற்போது சிவப்பு சந்தன மாளிகை விஜய் அணிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.