TVK Party : 'விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி...' பகீர் கிளப்பும் நிர்வாகி

கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் இழக்க வேண்டிய சூழல் வரும் - தவெக நிர்வாகி

Continues below advertisement
விழுப்புரம் ; விழுப்புரத்தில் இரு அணிகளாக செயல்படும் தவெக கட்சியினர். மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களின் வரவேற்பை திட்டமிட்டு புறக்கணித்த தவெக பொது செயலாளர் ஆனந்த்: ஆறு மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
 
விழுப்புரம் காமராஜர் நகராட்சி பள்ளி மைதானத்தில் தவெக கட்சி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக குஷி மோகன் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் இந்த முதல் கட்சி நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துக் கொள்வார் என கூறப்பட்ட நிலையில் விழுப்புரம் நகர் முழுவதும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.
 
இந்நிலையில் மாவட்ட செயலாளர் குஷி மோகன் தலைமையில் விழுப்புரம் புறவழி சாலையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்ட நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் தவெக கொள்கை தலைவர்களின் புகைப்படத்திற்கு மறியாதை செலுத்தும் விதமாகவும், பொதுச்செயலாளர் ஆனந்திற்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
 
இந்நிலையில் இதனை அறிந்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் குஷி மோகன் பொதுச் செயலாளர் ஆனந்தை இரு சக்கர வாகனத்தில் மாற்று பாதையில் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் காந்தி சிலை பகுதி வழியாக பொதுச் செயலாளரின் கார் மட்டும் சென்றதை அறிந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து காந்தி சிலை பகுதியில் ஏற்பாடுகளை செய்து இருந்த கில்லி சுகர்ணா கூறுகையில்:
 
இரண்டாயிரம் பேரைத் திரட்டி வரவேற்பளிக்க காத்திருக்கும் பொழுது எங்களை தவிர்க்கும் விதமாக பொதுச் செயலாளரை இருசக்கர வாகனத்தில் மாற்று பாதையில் அழைத்து சென்றுள்ளார். 2006 முதல் 11 வரை திமுகவில் நான் நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மேலும் கில்லி சுகர்ணா என்கிற பெயரில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நகரமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நாங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தவெகாவுக்கு வந்துவிட்டேன். நான் பொறுப்புக்கு வந்து விடுவேன் என்கிற பயந்து மாவட்ட செயலாளர் குஷி மோகன் சதி செய்கிறார். மாற்று வழியில் செல்வதை பொதுச் செயலாளர் ஆனந்த் எப்படி ஏற்றுக்கொண்டார் என தெரியவில்லை.
 
ஆறு மணி நேரம் காத்திருக்கிறோம். இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நோன்பு காலத்திலும் கூட காத்திருக்கிறார்கள். அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த கட்சி எப்படி முன்னுக்கு வரும். தளபதி விஜய் அறிவார்ந்த அரசியல்வாதிகளை கையில் எடுத்து அரசியல் செய்ய வேண்டும். மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர் ஆனால் கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் இழக்க வேண்டிய சூழல் வரும். விஜய் தகுதி வாய்ந்த அரசியல்வாதிகளை உடன் வைத்த அரசியல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
 
செய்தியாளர்களிடம் பேசிய சாபுவி என்ற மற்றொரு தவெக தொண்டர்:
 
தமிழக வெற்றிக்கழகம் எனும் மாபெரும் அமைப்பை விஜய் ஆரம்பித்துள்ளார். ஒரு காலத்தில் ரசிகராக இருந்தோம், விஜயின் எளிமை, பணிவை பார்த்து மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்துள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையாக தலித் மக்கள் வாழும் பகுதி. கட்சி பொறுப்பாளர்களில் தலித்துகளுக்கு இடம் கொடுக்கப்படவில்லை மேலும் இஸ்லாமியர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் எனக்கூறி எங்களை புறக்கணிக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை தலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்தாலும் எங்களால் விஜயை சந்திக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு பொறுப்புக்கும் பணம் வாங்கப்பட்டுள்ளது.
 
ஊழலற்ற ஆட்சி அதிகாரம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் தவெகவில் இணைந்துள்ளோம். இது விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை. பொறுப்புகளுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. நகர செயலாளர் பொறுப்புக்கு 15 லட்ச ரூபாய் பணம் கேட்கப்பட்டது. ஐந்து கொள்கை தலைவர்களை படம் வைத்து வரவேற்பளிக்க காத்திருந்தோம். புறக்கணிக்கப்படுவதால் எங்கள் குறைகளை கூறுவதற்கே நாங்கள் இங்கு காத்திருந்தோம். இந்த கட்சியை விஜய் நேரடியாக செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் தவெக தமிழ்நாட்டில் வளராது. விஜய் அரசியல் தலைவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்க முடியாது. விஜய் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு சமூக பணியாற்ற வேலை செய்ய வேண்டும் என வந்துள்ளார் ஆனால் இவர்கள் விஜயை ஏமாற்றுகிறார்கள்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola