நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நாள் முதல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், அதேசமயம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்.  முதல் கட்டமாக மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமனம் செய்வது, அதனைத் தொடர்ந்து பள்ளி படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்குவது. போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.


அந்த நிகழ்ச்சியில் அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகளை மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசினார், இது அரசியல் கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். 


கொடியை அறிமுக செய்த விஜய்


அதன்படி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வமான சின்னம் பொருந்திய கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். மேலும் அதே நிகழ்ச்சியில் கட்சியின் சின்னம், கொடிய பற்றியும் விரிவான விளக்கத்தை மாநாட்டில் தெரிவிக்கிறேன் என நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார். 


மேலும், கொடியில் இடம் பெற்ற யானையின் உருவம் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள யானை புகைப்படம் என்றும் அதனை நீக்குமாறும் கோரிக்கை எழுந்தது. யானை சின்னத்தை எந்த கட்சியும் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் தெரிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கக்கூடிய யானை சின்னத்தை நீக்க வேண்டும். அதேசமயம் கட்சி கொடி பற்றி பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




தவெக கொடி, சின்னத்திற்கு வலுக்கும் பிரச்சனை . 


இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தலைமையில் தலைமை தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியது.. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.


மேலும், நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம். யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமான வரலாற்று உறவு உள்ளது.


தமிழக வெற்றி கழகம் கொடியில்,  எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும், நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார். 


குறிப்பாக அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.




வழக்கறிஞர்களிடம் ஆவேசமாக பேசிய நடிகர் விஜய்


இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது வழக்கறிஞர் அணிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் கட்சியின் கொடி, சின்னம் பற்றி பல்வேறு கட்ட ஆலோசனை செய்த பிறகு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது கட்சியின் கொடிக்கும், சின்னத்திற்கும் எழுந்துள்ள பிரச்சனையை ஏன் என ஆவேசமாக நடிகர் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், நான் அரசியல் கட்சி தொடஙகும் போது எந்த விதத்திலும் பிரச்னை வர கூடாது. அதிலும் சின்னம், கொடியில் பிரச்சனை வர கூடாது என தெரிவித்து இருந்தும், வழக்கறிஞர்களான நீங்கள் என்ன செய்துக்கொண்டுள்ளீர்கள். இது போன்ற பிரச்சனை வருவதற்கு காரணமே நீங்கள் தான் என கோபம் பட்டதாக கூறப்படுகிறது. 


உடனடியாக இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை நான் எடுப்பேன் என ஆவேசமாக வழக்கறிஞர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.