இரு மொழிக் கொள்கையை கட்சியின் முக்கிய செயல் திட்டமாக தவெக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழே ஆட்சி மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் இருக்கும் என விக்கிரவாண்டி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவித்துள்ளது. 


இந்திக்கு நோ சொன்ன விஜய்:


தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். 


விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியது. இந்த சூழலில், ஒட்டு மொத்த மாநிலமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது. 


கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே தவெகவின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என பல்வேறு தரப்பினர் தினம் தினம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு தனது செயல்திட்டம் மூலம் விலாவாரியாக பதில் அளித்துள்ளார். அதன்படி, இரு மொழிக் கொள்கையை கட்சியின் முக்கிய செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழே ஆட்சி மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவெக மாநாட்டில் விஜய் பேசியது என்ன?


"அரசியல் எதற்கு நடித்தோமா நான்கு காசு பார்த்தோமா எனதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன்.  நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம் இல்லையா? நம்மை வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா? என நினைத்தேன், அதனால்தான் அரசியலுக்கு வந்தேன்.


இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது அந்த கலரை பூசுவது என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது. இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது, அந்த கலரை பூசுவது என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது, திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழகத்தின் இரண்டு கண்கள்.


திராவிடம் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். பெரியாரின் கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என விஜய் பேசியுள்ளார்.