நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து, இன்று(02.02.25) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் கொடியை ஏற்றி வைத்த கட்சியின் தலைவர் விஜய், அங்கு நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலையையும் திறந்து வைத்தார்.

Continues below advertisement

தலைமை அலுவலகத்தில் ஐம்பெரும் தலைவர்களின் சிலை

தவெக-வின் பனையூர் அலுவலகத்தில், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலருடன், கட்சியின் ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் விஜய், கழக கொடியை ஏற்றிவைத்தபின், ஐம்பெரும் தலைவர்களின் சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Continues below advertisement

இந்த நிகழ்விற்குப் பின்னர், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்களை விஜய் சந்தித்தார். பின்னர், அங்கு வந்திருந்த நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டுள்ளது.