கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் நவீன நடமாடும் இலவச டிஜிட்டல் காசநோய் கண்டறியும் X ray வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.




 


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவிக்கையில்,
 
நமது தேசிய இலக்கான 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ், நமது தமிழக அரசு 09.01.2023 திங்கட்கிழமை அன்று நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் ஒன்றை வழங்கியது. இந்த நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம், ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்டது.  மேலும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பொது மக்களுக்கு ஒளிபரப்பவும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளைப் பரப்பவும் இந்த வாகனத்தில் அகலத்திரை தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பிரிவு மூலம் காசநோய் கண்டறியும் சேவைகள் இன்னும் சென்றடையாத பகுதிகளுக்குச் சென்றடையும் எனவும் இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, காசநோய் இல்லாத கரூரை உருவாக்குவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், காசநோய் துணை இயக்குநர் மரு. சரவணன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தண்டயுதாபாணி மற்றும் தனித்துனை ஆட்சியர்(சபாதி) திரு.சைபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




 


 


கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  9 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.7650 மதிப்பிலான ரூ.68,850 மதிப்பீட்டில்  மூன்று சக்கர வண்டியினை வழங்கினார்கள்.
 
குளித்தலை வட்டம் இனங்கூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த 9 மாற்றுத்திறனாளி பயனாளிகளை கரூர் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம்  திட்ட ஓருங்கிணைப்பாளர்கள் ஏற்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது. 


 





இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் திருமதி.காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தண்டயுதாபாணி மற்றும் தனித்துனை ஆட்சியர்(சபாதி) திரு.சைபுதீன் வாழ்ந்து காட்டுவோம் அமைப்பின் செயல் அலுவலர் திருமதி.இளநங்கை அரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஆதிதிராவிடர்  நலத்துறையின்   கீழ்   இயங்கும் மேல்நிலை/  உயர்நிலை/தொடக்கபள்ளிகளில்  இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள்  காலிப்பணியிடங்களை  தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும்  மேல்நிலை/  உயர்நிலை/தொடக்கப்பள்ளிகளில்   கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி    இடைநிலை   மற்றும்  பட்டதாரி  ஆசிரியர்கள்   காலிப்பணியிடங்களை   தற்காலிகமாக   தொகுப்பூதியத்தில்  பள்ளி மேலாண்மைக் குழுவின்  மூலம்  நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கரூர் மாவட்டத்தில் இடைநிலை மற்றும்  பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் மற்றும் அறிவியல்) காலிப்பணிடத்திற்கு  தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்த்தகுதி   சான்றுகளுடன்   எழுத்து மூலமான  விண்ணப்பங்களுடன்   நேரடியாகவோ/ அஞ்சல்  மூலமாகவோ   13.01.2023 -  க்குள்    மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும்   பழங்குடியினர்   நல அலுவலகம்,   மாவட்ட ஆட்சியர்  வளாகம்,  முதல் தளம், அறை எண் .114 , கரூர் – 639007    என்ற முகவரிக்கு    அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  த.பிரபுசங்கர் தெரிவித்தார்.