திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி திருச்சியை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் இரவு ரோந்து பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் ஆடு திருடிய கும்பலை விரட்டி சென்றார். அப்போது, மணிகண்டன் என்பவர் எஸ்.எஸ்,ஐ, பூமிநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பானது. இது தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் கொலை வழக்கில் தொடர்புள்ள தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்களை கைது செய்தனர். சம்பவத்தில் கொலை செய்த இடத்தில் இருந்த ரத்த கரையும், கொலையாளியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மணிகண்டனிடம் இருந்ததாலும், செல்போன் சிக்னல்கள், சிசிடிவி காட்சி, கைரேகை தடயங்களும் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்களாக அமைந்தனர்.
இதன் அடிப்படையில் சட்டத்தை பாதுகாக்கும் பணியில் இருந்த சிறப்பு அதிகாரியை கொலை செய்த குறத்தத்தை ஏற்று கொள்ள முடியாது என்ற நீதிமன்றம், குற்றச்சாட்டப்பட்ட மணிகண்டனை குற்றவாளியாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்ற தீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும் மணிகண்டனிற்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
முன்னதாக போலீசாரின் விசாரணையில் 47 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்தும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்திருந்தனர்.
மேலும் படிக்க: தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு