தமிழ்நாடு சட்டஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்து வந்த பாதை தனித்துவமானது.  திருவனந்தபுரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அதிகாரியாக தன்னுடைய பணியைத் தொடங்கியவர். அதன்பிறகு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகடமியில் பயிற்சி பெற்றார்.


அதைத் தொடர்ந்து கோபிசெட்டி பாளையம், சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை, அடையார் துணை கமிஷனர்,விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் சென்னை காவல்துறையில் இணை கமிஷனராகவும் பணியாற்றினார்.


அதன்பிறகு திருச்சி டி.ஐ.ஜி ஆகவும், கரூர், தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார். அதன்பிறகு கோவை மாநகர கமிஷனர்,தமிழ்நாடு வடக்கு மண்டல ஐ.ஜி என காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிடுக்கு நடை காக்கிச்சட்டையாக மட்டுமே உலகமறிந்த சைலேந்திராபாபுவுக்கு மற்றொரு சுவாரசிய பக்கமும் உண்டு. சிக்காகோவில் ஸ்கை டைவிங், பாரா க்ளைம்பிங், சைக்கிளிங் எனப் பல்வேறு சாகசச் சம்பவங்களுக்குச் சொந்தக்காரர் சைலேந்திர பாபு.  அவரது சாகசங்களில் சில.... 

சென்னையில் அவர் செய்த பாரா க்ளைம்பிங்... 



சிக்காகோவில் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து விர்ர்ர்ரெனப் பறந்த அவரது ஸ்கை டைவிங் சாகசம்..



சைலேந்திர பாபு தீவிர சைக்கிளிங் ஆர்வலர். மூடுபனி, கடும்வெயில் என அவரது சைக்கிளிங் சாகசத்தைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவருக்கெனத் தனி சைக்கிளிங் குழுவும் இருக்கிறது.










சின்ன லெவல் சாகசமாக மனிதர் அவ்வப்போது யோகா செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்.






தமிழ்நாட்டின் சாகசக்காரரும், சட்டம் ஒழுங்கு டிஜிபி.,யுமான சைலேந்திரபாபுவுக்கு வாழ்த்துகள்!