மூன்றாம் பாலினத்தவர்களாக அறியப்படும் திருநங்கைகள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகே தங்களின் தனித்திறமைகளை உலகறிய செய்கின்றனர். அந்த வகையில் திருநங்கைகள் பலர் அரசியல்வாதியாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும் , ஆசிரியராகவும் , திரைபிரபலங்களாகவும் பல துறைகளில் தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்தில் திருநங்கைகளுக்கான அங்கீகரம் மெல்ல மெல்ல மாற தொடங்கியிருக்கிருக்கிறது என்றாலும் இன்றும் சிலருக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதுதான் திருநங்கைகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டை சேர்ந்த வாணி ஸ்ரீ என்பவர் , தான் 93.3% பொறியியல் பட்டதாரியாக இருந்தும் தனக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என நேர்காணல் ஒன்றில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.





இது குறித்து பேசிய அவர் “ வேலைக்காகத்தான் சென்னை வந்தேன். எனது 15 வயதிலேயே எனக்குள் இருக்கும் பெண்மையை உணர தொடங்கிவிட்டேன். என்னை போலவே எனது நண்பன் ஒருவர் இருந்தான். அவனையும் என்னையும்  மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். கல்லூரிக்கு சென்ற பிறகும் என்னை நான் மாற்றிக்கொள்ளவில்லை. அதன் பிறகு சென்னையில் வேலை கிடைத்தது. சென்னை மெட்ரோவில் சிறிது காலம் வேலை செய்தேன். நிறைய டிரைனிங் வகுப்புகளில் எல்லாம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அங்கு என்னை அனுகும் விதமும் மற்றவர்களை அனுகும் விதமும் வேறுமாதிரியாக இருக்கும். நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் உங்களுக்கெல்லாம் கொடுத்தாலே இப்படித்தான், சும்மா சிம்பதி கிரியேட் பண்ணி வேலைக்கு சேர வேண்டியதுபி.வி.ஆர், லூக்ஸ் என எல்லா நிறுவனங்களிலும் வேலை செய்தேன். ஆனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான். 12 வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு ஆரம்பத்தில் நிறைய கனவுகளை சுமந்து வந்தேன். இன்று எதுவுமே இல்லாமல் , வேறு திசை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது மாடல் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை, ட்ரைலரிங் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு தேவையானதை நானே தைத்துக்கொள்வேன். நிறைய கற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. நான் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில்  ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எங்களில் தேவைக்கு பணம் வேண்டுமே அதற்குதான். வேலைக்கு சென்றால் அனுமதிப்பதில்லை. எங்களின் செலவுக்கு வேறு என்ன செய்வது. அங்கும் சிலர் கத்தி முனையில் பணம் நகையை எல்லாம் கொள்ளையடித்து சென்றார்கள். திருநங்கைகளை கொஞ்சம்  ஏற்றுக்கொள்ள ஆரமித்துவிட்டார்கள் . ஆனால் தங்கள் வீட்டில் ஒரு திருநங்கை இருந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டால்  நாங்கள் ஏன் பாலியல் தொழிலுக்கு வந்து சிரமப்பட போகிறோம். அரசு எங்களுக்கு நிறைய அங்கீகாரம் கொடுக்கிறார்கள்.ஆணையும் பெண்ணையும் எப்படி சமூகத்தில் மதிக்கிறார்களோ அப்படி எங்களையும் மதிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் சமுதாயத்தின் விருப்பம் “ என தெரிவித்திருக்கிறார்.