தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆயுதப்படை ஐஜியாக உள்ள டாக்டர் ஜெ.லோகநாதன் பெருநகர சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெருநகர சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக உள்ள எம்.டி.குருமூர்த்தி ஐபிஎஸ், காவல்துறை தலைமையகத்தின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை ஆணையர் எம்.ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் தகுதியுடன் கூடிய தூத்துக்குடியில் உள்ள காவல்துறை ஆட்சேப்பு பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் கமாண்டண்ட் டி.பி.சுரேஷ்குமார், திருநெல்வேலி மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பள்ளியின் முதல்வர் எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் கமாண்டண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.