கரூர்: 10ஆம் வகுப்பு தேர்வு: உடல்நிலை சரியில்லாத மகளை கையில் தூக்கிவந்த தந்தை...!

10 ம் வகுப்பு தேர்வில் முதல் பரீட்சைக்கு நடந்து சென்று தேர்வு எழுதிய பள்ளி மாணவி இரண்டாவது பரீட்சைக்கு தந்தை கைகளால் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்த கரூர் சம்பவம்.

Continues below advertisement

கரூர் அருகே சுங்ககேட் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 36), இவரது மனைவி கவிதா இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், தனியார் பஸ்பாட்டி கம்பெனியில் நாள் கூலி வேலை செய்து வரும் இவருக்கு பெரிய மகள் 11 வது படித்து வருகின்றார். இளைய மகள் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

Continues below advertisement

 


கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இவர் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6 ம் தேதி முதல் பரீட்சைக்கு இவர் அங்கு நடந்தே சென்று வந்த இவர் 18 ம் தேதியான இன்று 2 வது பரீட்சையான ஆங்கிலம் பரீட்சைக்கு தந்தை உதவியுடன், அவரது தந்தை அந்த மாணவியை இரண்டு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. 

 


காரணம், அந்த மாணவிக்கு மீண்டும் காய்ச்சல் வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இடது காலில் ஒருவிதமான வலி மற்றும் உணர்ச்சியற்ற தன்மையுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது படிப்பு பாதியில் நின்று விடக்கூடாது என்று கடும் வலியுடன் தேர்விற்காக படித்த அந்த பள்ளி மாணவி இன்று இரண்டாம் பரீட்சையான ஆங்கிலம் பரீட்சைக்கு கால்கள் முடியாமல், தன் தந்தை உதவியுடன் தந்தை இரு கைகளால் தூக்கி கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

 


மேலும், சாதாரண கூலி வேலை செய்து வரும் சுரேஷ் தனது மகளுக்கு என்ன செலவு செய்தாலும் தனது உயிரையும் பணயம் வைத்து கூட செலவு செய்ய கனவு காணும் இவரது மகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாகும், அதுமட்டுமில்லாமல், இந்த இரண்டாவது மகள் வைத்திய செலவிற்காக வீட்டில் இருந்த தங்க நகைகளையும் அடமானம் வைத்து செலவு செய்துள்ள இவருக்கும், இவரது மகளுக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 


மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எண்ணற்ற சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இது என்ன விதமான நோய் என்பதனை கண்டறிந்து இனி வரும் காலத்தில் அது போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும். கரூர் அருகே தனது மகள் அரசுத் தேர்வு எழுத வேண்டும் என அவரது தந்தை தனது மகளை சுமந்து வகுப்பறையில் விட்ட நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. தற்போது அந்த மாணவி தேர்வு எழுதிய பிறகு திருச்சியில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரிக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்காக கூட்டிச் சென்றுள்ளனர்.

Continues below advertisement