தோகைமலை அருகே இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை எடுத்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதால் மாற்று இடம் வழங்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 




கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் கழுகூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளை கோடாங்கிபட்டியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை இந்நிலையில் இவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் உடலை அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லவேண்டும். ஆனால், மயானத்துக்குச் செல்லும்பொழுது சாலை வசதி, மின்சார வசதி, எரிமேடு வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி ஏதும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பல்வேறு கால கட்டங்களில் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.




இந்நிலையில் தான் மேலுமொரு மனக்கசப்பான நிகழ்வு ஒன்று அப்பகுதியில் நடந்துள்ளது.  பிள்ளை கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த அழகர் மனைவி செல்லம்மாள் வயது 60 என்பவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் கடந்து  உடலை எடுத்துச் சென்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.   இறந்த (செல்லம்மாள் ) உடலை சுமந்து அந்த வழியாக சென்று தண்ணீருக்குள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் வரும் தேர்தலில் தங்களது எதிர்ப்பை காட்டி எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூரில் இறந்தவர் உடலை தண்ணீருக்குள் எடுத்த சென்று அடக்கம் செய்த நிகழ்வு கண்ணீரை வரவழைத்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோல் நிலைகள் காணப்படுகின்றன. இதைவிட இது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும். எனவும், இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல வசதி இல்லாததால் அதற்காக முக்கியத்துவம் கொடுத்து இந்த பிரச்சனையை விரைவாக தீர்வு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.